Death announcement: JSR Shekhar, a Chairman of Elizabeth Educational Institutions, died

பெரம்பலூர் அருகே உள்ள எலிசபெத் , ஜே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளரும், ஓய்வு பெற்ற தலைமையாசிரியருமான ஜே.எஸ்.ஆர். சேகர் நேற்று மாலை காலமானார்.

பின்தங்கிய பெரம்பலூர் மாவட்டத்தில், அன்னமங்கலம் பகுதியில் 1982 முதல் எலிசபெத் பாலிடெக்னிக் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை தொடங்கி நடத்தி வந்த அவர் , பல ஏழை எளிய மாணவர்கள் கல்வி பயில உதவி செய்துள்ளார். அரசாங்காமே இப்பகுதியில் பள்ளிக்கல்வியை தவிர வேறு எந்த வொரு உயர்க்கல்வியை வழங்காத காலக்கட்டத்தில் பின்தங்கிய இப்பகுதி மாணக்கார்கள் முன்னேற வெகுசிரத்தையுடன் பணத்தை முக்கிய குறிக்கோளாக வைக்காமல் கல்வி சேவையை வழங்கி வந்தார்.

கட்டணமே இல்லாமல் பலருக்கு கல்வி சேர்க்கை கொடுத்து உள்ளார். மேலும், ரூ. 100, 50 என ஏழை எளியவர்கள் கூலி வேலை செய்து சிறுகசிறுக பணம் செலுததினால் கூட பெற்றுக் கொள்வார். முகம் சுளிக்க மாட்டார். பலர் படிப்பு முடித்தும் பணம் கட்ட முடியாத மாணவர்களை வேலைக்கு சென்ற பின்னராவது கல்வி கட்டணத்தை செலுத்த முயலுங்கள் என தெரிவித்த ஓர் நல்ல ஆசிரியர்…. அண்ணாரது மறைவிற்கு காலைமலர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்..
அண்ணாரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணி அளவில் எலிசபெத் பாலிடெக்னிக் கல்லூரி அருகே நடைபெற உள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!