Death of a youth fallen from motorbike near Perambalur: Police investigation
பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் வசித்து வருபவர் குரு.ராஜேஷ். பா.ஜ.க. மாவட்ட செயலாளர், இவரது தம்பி விக்கி என்கிற ரவிசங்கர் (வயது29).
குரு.ராஜேஷ் கட்டிட ஒப்பந்த வேலைகள் செய்துவந்தார். விக்கி அவருக்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளார். நேற்று இரவு விக்கி வடக்குமாதவி சாலையில் உள்ள சமத்துவபுரத்திற்கு தனது சித்தி வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் சென்றார்.
சமத்துவபுரம் நுழைவு வாயில் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து சரிந்து கீழே விழுந்தார். அப்போது சமுதாய கூடத்தின் மாடியில் தூங்கிகொண்டிருந்த இளைஞர்கள் அங்கிருந்து கீழே இறங்கிவந்து பார்த்தபோது விக்கி இதயவலியால் துடித்துக் கொண்டிருந்தார். மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் அவரது காலில் காயம் ஏற்பட்டது.
உடனே அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வழியிலேயே விக்கி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குபதிவு செய்து விக்கியின் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.