Dec. 4 -2 plus students will largely from the Middle Zone and choose a mathematical model exam: Rover college has 5 thousand pupil write
மத்திய மண்டல அளிவலான பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் டிச.4ல் மாதிரி கணித தேர்வு : ரோவர் கல்லூரியில் 5ஆயிரத்திற்கும் எழுத உள்ளனர்.
பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மாதிரி கணிதத்தேர்வு நாளை மறுநாள் (டிச.4ம் தேதி) பெரம்பலூர் ரோவர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது என கல்லூரி முதல்வர் கணேஷ்பாபு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருப்பதாவது :
பெரம்பலூர் ரோவர் பொறியியல் கல்லூரி, ரோவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து மாநில அளவிலான பிளஸ்2 மாணவர்களுக்காக நாளை மறுநாள் (4ம்தேதி) காலை 10.00 மணியளவில் மாபெரும் மாதிரிக் கணிதத் தேர்வினை நடத்த உள்ளது. இந்த மாதிரி கணிதத் தேர்வு கடந்த 4வது ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வினை சுற்றியுள்ள பல மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட பிளஸ்2 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு எழுதினர்.
கடந்த ஆண்டு 4ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் தேர்வில் பங்குபெற்று, அரசுப் பொதுத் தேர்வில் 200க்கு 190 மதிப்பெண்களுக்கு மேலாக மதிப் பெண்களைப் பெறுமளவுக்கு மாணவர்களுக்கான முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருந்தன.
இந்தத்தேர்வு தலைசிறந்த கணித ஆசிரியர்களைக் கொண்டு வினாத்தாள் தயாரிக்கப் பட்டு, மாணவ,மாணவியர் எளிதில் பொதுத்தேர்வில் 200க்கு 200மதிப்பெண்களைப் பெற ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற இயலும்.
இந்தஆண்டு 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் நாளை மறுநாள் நடத்தப்படும் மாதிரித் தேர்வில் கலந்துகொள்ள உள்ளனர். இதன்மூலம் மாணவர்கள் தங்களை பொதுத்தேர்விற்கு உரிய வகையில் தயார் செய்து கொள்ள ஏதுவாக அமையும். இந்தத் தேர்வில் பங்கேற்கும் நபர்களுக்கு கணித வினாவிடை புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது என்றும், அனைத்து முக்கிய வழிதடங்களிலும் மாணவர்கள் வந்து செல்ல இலவச பேருந்து, உணவு வசதி, தங்குமிடம் தேவைப்படுவேர்களுக்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அப்போது துணை முதல்வர் அல்லிராணி, பேராசிரியர் பெரியசாமி, உயர்கல்வி இயக்குனர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
பதிவு செய்து கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் குறுச்செய்தி மூலமாகவும், மதிபபெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பள்ளியிலேயே சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.