Deepening the need to get permission to build new wells, bore wells – Government Notice

பெரம்பலூர் மாவட்டத்தில் 2016 வடகிழக்கு பருவமழை பொய்த்ததை தொடர்ந்து, குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலைமையை சமாளித்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏதுமின்றி தேவையான குடிநீர் வழங்கப்பட வேண்டியுள்ளது. எனவே, கிராம ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கிட அமையப்பெற்றுள்ள குடிநீர் ஆதாரங்களுக்கு 100 மீட்டருக்குள் தனிநபர் அல்லது நிறுவனங்கள் மூலமாக புதிய கிணறுகள் தோண்டுதல், ஏற்கனவே உள்ள கிணறுகளை ஆழப்படுத்துதல் மற்றும் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் போன்ற பணிகளை தனி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ)-களின் அனுமதியின்றி மேற்கொள்ளகூடாது.

மேலும், தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மூலம் மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படின், தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ)-களிடம் அனுமதி பெறுவதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் கட்டணமாக ரூ.5,000-க்கான வங்கி வரைவோலையுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

அவ்விண்ணப்பத்தினை தனி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ)-ஆல் பரிசீலித்து பொதுமக்களின் குடிநீர் ஆதாரத்தை பாதிக்காது என்பதை உறுதி செய்த பின்னர் விண்ணப்பம் பெறப்பட்ட 30 தினங்களுக்குள் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு உரிய அனுமதி ஆணை வழங்கப்படும்.

மேலும், வணிக ரீதியான பதிவுச் சான்று பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் கட்டணமாக ரூ.15,000-க்கான வங்கி வரைவோலையுடன், பெரம்பலூர் மாவட்ட ஆட்சிப் பணியாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் பெறப்பட்ட 45 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சிப் பணியாளரால் விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து, உரிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு பதிவுச் சான்றை வழங்குவார்.

எனவே, பொதுமக்கள் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைப்பு நல்க வேண்டும். மேலும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட விதிமுறைகளுக்கு முரணாக செயல்படுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!