Deer hunt near Perambalur: Guns confiscated, One arrested and 5 Escaped

பெரம்பலூர் மாவட்டம் வெண்பாவூரில், உள்ள வனப்பகுதியில் சுமார் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட காப்புக் காடுகள் உள்ளது. இதில் மான்கள் மற்றும் காட்டு பன்றிகள் வசித்து வருகிறது. இந்த வனப்பகுதியில் மான் வேட்டையாடும் கும்பல் சிலர் அவ்வப்போது வனவிலங்குகளை வேட்டையாடி எடுத்து சென்று விடுகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு கை.களத்தூர் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போது, வெண்பாவூருக்கும் – கிருஷ்ணாபுரத்திற்கும் இடையே ஒரு கும்பல் ஒரு மானை வேட்டையாடி எடுத்து வந்துள்ளனர். அவர்களை போலீசார் மடக்கி பிடிக்க முயன்றபோது ஒருவர் சிக்கிக் கொண்டார். மற்ற 5 பேர் தப்பி ஓடி விட்டனர். அப்போது கழுத்து அறுபட்ட நிலையில் ஒரு மான் மற்றும் 3 நாட்டு துப்பாக்கிகள், 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை அங்கேயே போட்டுவிட்டு தப்பி சென்றனர்.

சிக்கி கொண்டவரிடம் விசாரித்தபோது அவர் அன்னமங்கலத்தைச் சேர்ந்த மதலைமுத்து (வயது54) என்பதும், அவருடன் மான் வேட்டையில் ஈடுபட்டது ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜோசப் (40), பெரிய வடகரை ஜமால்(30), வெண்பாவூர் தமிழ்(25), வெங்கலம் ரவி (30) அதே ஊரைச் சேர்ந்த மணி(30) என்பதும் தெரிய வந்தது.

பின்னர் போலீசார் இறந்த நிலையில் கிடந்த மான் மற்றும் 3 நாட்டு துப்பாக்கிகள், 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர், பின்னர் அவற்றை வேப்பந்தட்டை வனசரக அலுவலர் குமாரிடம் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து வனச்சரக அலுவலர் குமார் மற்றும் வனத்துறையினர் வழக்கு பதிந்து மதலைமுத்துவை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் மேலும் தப்பி ஓடிய ஐந்து பேரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!