deer rescue stray in the well near In Perambalur

பெரம்பலூர் அருகே வழிதவறி கிணற்றில் விழுந்த புள்ளி மானை தீயணைப்புத்துறையினர் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், எசனை அருகே உள்ள கீழக்கரை கிராமத்தை சேர்ந்தவர் மருதைமுத்து ஓய்வு பெற்ற ஆசிரியர். இன்று விடியற்காலை 5 மணி அளவில் வயலில் சம்மங்கி பூக்களை அறுவடை செய்து கொண்டிருந்தார். அப்போது சலசலவெனும் சத்தம் கேட்டது. சுதாகரித்த அவர்கள் பார்த்த போது அவ்வழியாக வந்த ஏதோ உன்று அங்கிருந்த கிணற்றுக்குள் வழிதவறி விழுந்தது. ஆட்கள் யோரோ விழுந்து விட்டனரா என எண்ணிய அவர் கிணற்றை எட்டி பார்த்தார். அப்போது சுமார் மூன்றரை வயது மதிக்கத்தக்க மான் ஒன்று கிணற்றுக்குள் தத்தளிப்பதை பார்த்து உடனே கிராம நிர்வாக உதவியாளருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தெரிவித்த தகவலின் பேரில் விரைந்து கிணற்றி தத்தளித்த மானை மீட்டனர். மானின் வலது முன்னங் காலின் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிய வந்தது. பின்னர், மானை எசனை கால்நடை மருத்துவமனையில் சிசிச்சை அளித்து வனத்துறையினரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். வனத்துறையினர் சிகிச்சை முடிந்த பின்னர் மீண்டும் வனத்தில் விட உள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!