Deficiency of service; Perambalur Consumer Court ordered Deputy Director of Horticulture to provide relief of Rs.1.80 lakh!


பெரம்பலூரில் சேவை குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.1.80 லட்சம் நிவாரண தொகை வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் தோட்டக்கலை துணை இயக்குநர் ஆகியோருக்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் கம்பன் தெருவை சேர்ந்த மெய்யப்பன், அவரது மகன் கார்த்திகேயன் மற்றும் பொம்மனப்பாடியை சேர்ந்த குணசேகரன் மனைவி ஹேமலதா ஆகியோர். இவர்களது விவசாய நிலம் நக்கசேலம் கிராமத்தில் உள்ளது. இவர்கள் வெங்காயம் பயிரிட்டிருந்தனர்.

இந்த பயிருக்கு பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூ. ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 203க்கு இன்சூரன்ஸ் செய்து அதற்காக பிரிமியத்தொகை ரூ. 7 ஆயிரத்து 810 யை ஆன்லைன் மூலம் செலுத்தி இருந்தனர்.


கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக விவசாயி மெய்யன், கார்த்திகேயன், ஹேமலதா ஆகியோரது நிலத்தில் சாகுபடி செய்திருந்த வெங்காய பயிர் மழைநீரில் மூழ்கி வெங்காயம் அழுகி விட்டதால் ஒட்டு மொத்த வெங்காய வெங்காய பயிரும் முழுமையாக சேதமடைந்து விட்டது. இது குறித்து தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் நேரில் கள ஆய்வு செய்து பயிர் சேதம் குறித்து அறிக்கையை தோட்டக்கலை துறை துணை இயக்குநருக்கு அனுப்பினர்.

இந்த அறிக்கையின் மூலம் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு பயிர் சேதம் குறித்த அறிக்கை அளிக்கப்பட்டது. இதையடுத்து இழப்பீடு தொகை பாதிக்கப்பட்ட விவசாயியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என கூறினர். ஆனால் இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படவில்லை.


பாதிக்கப்பட்ட விவசாயிகள் 3 பேரும் இன்ஸ்சூரன்ஸ் தொகையை வழங்க வலியுறுத்தி வக்கீல் அய்யம்பெருமாள் மூலம் இன்சூரன்ஸ் நிறுவன மண்டல மேலாளருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து இன்சூரன்ஸ் நிறுவனம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 3 பேருக்கு வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இன்ஸ்சூரன்ஸ் தொகை ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 203 ரூபாய்க்கு பதில் ரூ. 29 ஆயிரத்து 288 மட்டுமே வரவு வைக்கப்பட்டது. ஆனால் மீதமுள்ள தொகை வழங்கப்படவில்லை.


இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 3 பேரும் பயிர் காப்பீட்டு தொகை முறையாக கட்டியிருந்தும், வெங்காய பயிர் முழுமையாக சேதமடைந்த அழுகி போனதால் உரிய காலத்தில் இழப்பீட்டு தொகையை வழங்காததால் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் நிறுவனமும், பெரம்பலூர் தோட்டக் கலை துறை துணை இயக்குநர் ஆகியோர் சேவை குறைபாடு ஏற்படுத்தியதற்காக ரூ. ஒரு லட்சம் நஷ்ட ஈடாக வழங்கவேண்டும் , வழக்கு செலவை தொகையாக ரூ 25 ஆயிரமும் வழங்க நடவடிக்கை எடுக்ககோரி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.


இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தின் தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் கொண்ட குழுவினர் மனுதாரரின் மனுவை பகுதியாக அனுமதித்து, இருதரப்பிலும் விசாரணை நடத்தினர்.


இதையடுத்து அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் நிறுவன மண்டல மேலாளர் மற்றும் பெரம்பலூர் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஆகியோர் சேவைகுறைபாடு காரணமாகவும், மனஉளைச்சலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 3 பேருக்கும் நஷ்ட ஈடு தொகையாக தலா ரூ.50 ஆயிரம், வழக்கு செலவுத் தொகையாக ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ. ஒரு லட்சத்து 80 ஆயிரம் தொகையை இந்த தீர்ப்பு வெளிவந்த நாளில் இருந்து 45 நாட்களுக்குள் வழங்கவேண்டும்.

காலதாமதம் ஏற்பட்டால் 8 சதவீதம் ஆண்டுவட்டி கணக்கிட்டு தரவேண்டும் என உத்தரவிட்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!