அக் கல்லூரியின் முதல்வர் என்.ராஜாராமன் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரிலுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் 2016ஆம் ஆண்டிற்கானபட்டமளிப்பு விழா நாளை காலை 11.00 மணிக்கு பெரம்பலூர் புதிய பேருந்துநிலையம் , பாலக்கரை அருகிலுள்ள ஜே.கே. மஹாலில் நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் கல்லூரி கல்வி இயக்குநர் அறிவுரையின் படி, குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவை நடத்த வேறொரு தேதி தேர்வு செய்யப்பட்டு அனைவருக்கும் தெரிவிக்கப்படும். என தெரிவித்துள்ளார்.