Demand for private fund institutional Repayment to investors
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு முதிர்வுத்தொகையை வழங்கக்கோரி நாமக்கல்லில் சிஐடியு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிஐடியு சார்பில் நாமக்கல் பார்க் ரோட்டில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பிஏசிஎல் களப்பணியாளர்கள் சங்க துணைத்தலைவர் சதாசிவம் தலைமை வகித்தார்.
சிஐடியு மாநில துணைத்தலைவர் உதயகுமார், மாவட்ட செயலாளர் வேலுசாமி ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினார்கள். இந்தியா முழுவதும் கடந்த 2013 வரை செயல்பட்ட தனியார் நிதி நிறுவனம் சட்டப்பிரச்சினை காரனமாக அந்த நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.
இது சம்மந்தமாக சுப்ரீம் கோர்ட்ட தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில் அந்த நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்து 6 மாதத்திற்குள் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதுவரை 35 மாதங்களாகியும் பணத்தை திருப்பி வழங்காததால் முதலீட்டாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மத்திய அரசு நேரடியாக இதில் தலையிட்டு பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
திரளான முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.