Demonstration at perambalur for Exemption for the NEET Exam and the demonization of student Anita’s death

பெரம்பலூர்: நீட் தேர்விற்கு விலக்கு கோரியும் அரியலூர் மாவட்ட மாணவி அனிதா மரணத்திற்கு நீதீ கேட்டும் திமுக சார்பில் 13.9.2017 அன்று தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சிகளின் ஆதரவு கோரியிருந்தது.

அதையொட்டி பெரம்பலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளர் குன்னம். சி.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம், உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மாவட்ட பொறுப்பளர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

சிபிஎம் சார்பில் மாவட்டக்குழு என்.செல்லதுரை, எ.கலையரசி, பி.ரமேஷ், வட்டசெயலாளர் ராஜாங்கம், வேப்பந்தட்டை காசிராஜன், மாவட்டக்குழு ஏ.கே.ராஜேந்திரன், எஸ்.அகஸ்டின், வட்டக்குழு பி.சீனீவாசன், பி.முத்துசாமி, பி.கிருஷ்ணசாமி, எம்.செல்லதுரை, ஆட்டோசங்கம் சி.சண்முகம், எஸ்.கே.சரவணன், மாதா; சங்க மாவட்ட பொருளாளர் கல்யாணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!