Demonstration at the state level in June if the demands are not fulfilled: TECSES staff decision
|| கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால், ஜுனில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம் : கூ.சி.நா.ச.ஊழியர்கள் முடிவு

கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் ஜுன் மாதம் மாநில அளவில் ஆர்ப்பாட்டம் பெரம்பலூரில் கூட்டுறவு சிக்கன நாணய சங்க ஊழியர்கள் மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு

பெரம்பலூர். தமிழ்நாடு மாநில பணியாளர்கள் கூட்டுறவு சிக்கள நாணய சங்க ஊழியர்களின் மாநில செயற்குழு கூட்டம் பெரம்பலூரில் இன்று நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஜெ.பழனியான்டி வரவேற்றார். நிறுவனர் அந்தோனி முத்துசேவியர் பொதுச்செயலாளர் பா.சம்பத், துணைப் பொதுச் செயலாளர் என்.சந்தனராஜ், பொருளாளர் வி.ஆர். பட்டாபிராமன் அமைப்புச் செயலாளர் கே.வி.மகாலிங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில தலைவர் எஸ்.பத்மராஜ் சிறப்புரையாற்றினார். பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் படிகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இரண்டாவது ஊதியக்குழுவில் மறுக்கப்பட்ட ஊதியம் படிகள் மற்றும் சலுகைகள் பெறவேண்டும்,

இரண்டாவது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டு 10 வருடம் முடிந்த நிலையில் புதிய ஊதியக் குழு நிர்ணயம் செய்து தர வேண்டியும், பணியாளர்கள் கூட்டுறவு சிக்க நாணய சங்க ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க பரிசீலனை குழு அமைத்து ஒரு ஆண்டு ஆகியும் நிறைவேற்றப்படாததால் மூன்று கட்ட போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டமைப்பின் நிறுவனர் கு.அந்தேணிமுத்து சேவியரின் பணிநிறை பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் கோரிக்கைகள் சம்பந்தமாக அமைக்கப்பட்ட பரிசீலணைக் குழு அறிக்கை சமர்ப்பிக்கக் கோரி 3.5.2017 முதல் 5.5.2017 முடிய மூன்று நாட்கள் கோரிக்கை அடையாள அட்டை அணிந்து பணிபுரிய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக 17.5.2017 முதல் 19.5.2017 வரை மூன்று நாட்கள் மண்டல அளவில் இணைப் பதிவாளர் அலுவலகம் முன்பும் 19.6.2017 அன்று ஒரு நாள் மாநில அளவிலும் தலைநகர் சென்னையில் பதிவாளர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பிரச்சார செயலாளர் எஸ்.பரமாத்மா, தலைமை நிலைய செயலாளர் ஆர்.பத்மநாதன், தணிக்கையாளர் ராஜகோபால் பெரம்பலூர் மண்டல செயலாளர் ரா.பாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் ரா.மணிவண்ணன், பொருளாளர் து.மணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!