Demonstration by the Marxist-Communist Party against the Central Government, DMK. Participating coalition parties included!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக ஆளுநரை வைத்து போட்டி அரசு நடுத்துவதையும், ஆளுநர்களைப் பயன்படுத்தி உழைக்கும் மக்கள் நல திட்டங்களுக்கும் , மசோதாக்களுக்கும் அனுமதி தர மறுப்பது, எதிர்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு பாரபட்ச நிதி பங்கீடு ,
புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்கட்சி தலைவர்களை மிரட்டுவது போன்ற, மாநில உரிமைகளை பறிக்கும் ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து ,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பெரம்பலூர் தி.மு.க. மாவட்டச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் என். கிருஷ்ணமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், பொறியாளர் அணி மாநில துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ் குமார், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சுரேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஞானசேகரன், மாவட்ட செயலாளர் ஜெயராமன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெயசீலன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் ரத்தினவேல், கிழக்கு மாவட்ட செயலாளர் கலையரசன், விவசாய பிரிவு மாநில செயலாளர் வீர. செங்கோலன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் சர்புதீன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகமது இலியாஸ் அலி, பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலாளர் காமராசு, திராவிட கழக மாவட்ட தலைவர் தங்கராசு, மாவட்ட செயலாளர் விஜேந்திரன், பெரியார் விடுதலை கழக மாவட்ட நிர்வாகி துரை. தாமோதரன், மக்கள் அதிகாரம் தலைவர் காவிரி நாடன், இந்திய தொழிலாளர் கட்சி தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்று கண்டன உரையாற்றினார்கள்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!