Demonstration in Namakkal, denouncing Supreme Court verdict against Hindu culture
இந்துக்களின் கலாச்சாரத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்புகளைக் கண்டித்து நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்க அனைத்து வயதுள்ள பெண்களும் செல்லலாம் என்றும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டை குலைக்கும் வகையில் பெண்கள் யாருடனும் உறவு வைத்துக்கொண்டால் தவறு இல்லை என்றும், ஆண் ஆணுடனும், பெண் பெண்ணுடனும் உறவு வைத்துக்கொள்ளலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்புகள் இந்த மதத்தவர்களின் கலாச்சாரத்தை அழிப்பதாக உள்ளது.
இதைக்கண்டித்து நாமக்கல் மாவட்ட இந்து அமைப்புகளின் சார்பில் நாமக்கல் பார்க் ரோட்டில் கண்டனக்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேய பக்தசபா குருமூவீஸ் மணி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
டாக்டர் சந்திரன், திருச்செங்கோடு பொன் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார். ஐயப்ப பக்தர்கள் சங்கம், இந்து முன்னணி, இந்து சமய ஆன்மீகப் பேரவை உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை திரும்ப்பெற வேண்டும் என வலியுறுத்தி பேசினார்கள். கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.