Demonstration in Perambalur condemning the sexual murder of a Dalit girl in Uttar Pradesh
உத்திரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் இளம்பெண் பாலியல் படுகொலையைக் கண்டித்தும், சமீப காலங்களில் அதிகரித்து வரும் குழந்தைகள் பெண்கள் மீதான பாலியல் வன்செயல்களைத் தடுத்து நிறுத்தக் கோரியும் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழி லாளர் சங்கம் சார்பாக கூட்டாக அறிவித்ததையொட்டி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில், அந்த மூன்று அமைப்பின் சார்பாக கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநில செயலாளர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.செல்லதுரை ஆர்ப்பாட்ட உரையாற்றினார். மாதர் சங்க நிர்வாகி எ.கலையரசி, கரும்பு விவசாயிகள் சங்கம் ஏ.கே.ராஜேந்திரன் சிபிஎம் நிர்வாகிகள் பி.கிருஷ்ணசாமி, எம்.கருணாநிதி, ஆட்டோ சங்கம் சி.சண்முகம், மல்லீஸ்குமார், மின்ஊழியர் மத்திய அமைப்பு பன்னீர்செல்வம், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.