Demonstration in Perambalur demanding abandonment of outsourcing!
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், இன்று காலை, தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், தூய்மை பணியில், அவுட் சேர்ர்சிங் முறையை கைவிடவும், சட்டப்படி குறைந்த பட்ச ஊதியம், கலெக்டர் அறிவித்தப்படி வழங்கவும், ஈ.பி.எப். பிடித்தத்தை கணக்கில், சேர்க்கவும், இ.எஸ்.ஐ காப்பீட்டிற்கு அடையாள அட்டையும், கொரோனா கால சிறப்பு ஊதியமும், இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் நடந்தது.