Demonstration in Perambalur demanding withdrawal of ordinances affecting the livelihood of municipal and Town Panchayat employees!
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை அருகில், இன்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சி. பொன்ராஜ் தலைமையில், பெருந்திரள் முறையீடும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்தது. மின்னல்கொடி, தர்மலிங்கம், உள்பட பலர் முன்னிலை வகித்தனர். சிஐடியூ மாவட்ட செயலாளர் எஸ். அகஸ்டின், மாவட்ட பொருளாளர் ரெங்கராஜ், மாவட்ட துணைத் தலைவர் மணிமேகலை, உள்பட பலர் கண்டன உரை நிகழ்த்தினர்.
ஆர்ப்பாட்டத்தில், புதன், ஞாயிற்றுக்கிழமைகளில் பகுதிநேர விடுமுறையும், பண்டிகை நாட்களில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை, குறைந்தபட்ச ஊதிய அரசாணைக்கு மாறாக ஊதியத்தை குறைக்க கூடாது, மாத, மாதம் பிடித்தம் செய்த EPF பணத்தை ஊழியர் கணக்கில் செலுத்தவும், தொடர்ந்து பணிபுரியும் ஒப்பந்த தினக்கூலி தூய்மை பணியாளர்களை நிரந்தரமாக்கவும், 7 வருடங்களுக்கு மேலாக ஊதிய உயர்வு வழங்காமல் ஒப்பந்தம் நீட்டிப்பை கைவிட்டு நகராட்சி நிர்வாகமே நேரிடையாக கலெக்டர் அறிவித்த தினக்கூலி வழங்க கோரியும், வரும் மார்ச் மாதம் இது தொடர்பாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாகவும் தெரிவித்தனர்.
மாவட்ட தலைவர் ரெங்கநாதன், மாவட்ட துணைத் தலைவர்கள் கருணாநிதி, மணிமேகலை, புவனேஸ்வரி, மாவட்ட துணை செயலாளர்கள் சிவானந்தம், செல்லதுரை, ஆறுமுகம், மாவட்டக்குழுவை சேர்ந்த, அழகேசன், பன்னீர்செல்வம், கிருஷ்ணசாமி, வரதராஜ், அன்புராஜன், சரண்குமார், தமிழாசி, தமிழ்வேந்தன், சின்னசாமி, அழகர்,பாக்கியராஜ், யுவராஜ், குணசேகரன், செல்வி, பிரேமா உள்பட நகராட்சி, பேரூராட்சி பணியாளர்கள் திரளாக போராட்டத்தில் கலந்து கொண்டனர்.