Demonstration in Perambalur protesting the plan to collect empty bottles by Tasmac employees!

பெரம்பலூர், வடக்கு மாதவி சாலையில் உள்ள மாவட்ட டாஸ்மாக் அலுவலத்திற்கு முன்பு இன்று காலை டாஸ்மாக்கின் அனைத்து பணியாளர்கள் கூட்டுக் குழு சார்பில், காலி பாட்டில்களை சேகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாநில டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜி.வி. ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் நிர்வாகம் மதுபான பாட்டில்களை லேபிளை ஒட்டி விற்பனை செய்து ரூ.10/-கூடுதலாக வசூலித்து பயனாளி அப்பாட்டிலை கொடுத்தால், வசூலித்த ரூ.10யை திருப்பி தருவது, லேபிள்களையும் காலி பாட்டில்களையும் கணக்கீட்டு, பாதுகாத்து ஒப்பந்ததாரரிடம் ஒப்படைப்பது என்ற புதிய பரிசாத்த முறையில் பெரம்பலூர் & அரியலூர் மற்றும் கோவை மாவட்டங்களில் 01.04.2023 முதல் அமல்படுத்திட முடிவு செய்துள்ளது. இதனை எதிர்த்து மாவட்ட கூட்டுக்குழு சார்பில், வாய்மொழியாகவும், கடிதம் முலமும் பதில் தெரிவித்துப் பயனில்லை இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதற்கட்டமாக ஈடுபடுவதாகவும்,

மேலும், காலி பாட்டில்களில் லேபிள் ஒட்டுவது,பாட்டிலை சேகரிப்பது கணக்கிடுவது எங்கள் வேலையல்ல என்றும், ஏற்கனவே மதுக்கடைகளில், மதுபாட்டில்கள், காலி அட்டைப் பெட்டிகளை வைக்க இடமில்லாத நிலையில், கூடுதலாக கடையில் காலி பாட்டிலை வைக்க இடம் போதாது என்றும், இதனால், பயனாளிகளுக்கும், பணியாளர்களுக்கும் இத்திட்டம் மோதலை உருவாக்கும்,

காலிபாட்டிலால் பணியாளர்களுக்கு சுகாதார கேட்டினை ஏற்படுத்தும், நிர்ணயித்த நேரத்தை விட கூடுதலாக இரவு 10.00 மணி வரை வேலை செய்து விட்டு, கணக்கை முடிப்பபதற்கு இரவு 12.00 மணி ஆகிறது. இதில் பாட்டில் கணக்கை எந்த நேரத்தில், சரிபார்ப்பது,

தற்காலிகம் கேசுவல், தொகுப்பூதியத்தில் 20 ஆண்டுகள் பணி செய்யும் தங்கள் மீது கூடுதலாக பணி சுமையை ஏற்றக் கூடாது, டாஸ்மாக் நிர்வாகமே இத்திட்டத்தை திரும்பபெற வேண்டும், இல்லை எனில் மாநில அளவிலான போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும், தொகுப்பூதியத்தில் பெறும் அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், பெரம்பலூர், அரியலூர் மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவை சேர்ந்த ஏராளமான பணியாளர்கள் திராளக கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!