Demonstration near the Perambalur demanding the cancellation of the Primary Agricultural Cooperative Credit Association election
பெரம்பலூர்ர் மாவட்டம், வயலூர் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு சங்க தேர்தலுக்காக வயலூர், அகரம்சீகூர், கீழப்பெரம்பலூர் பகுதி உறுப்பினர்கள் 53 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர்.
வேட்பு மனு பரிசீலனை நேற்று நடைபெற இருந்ததது. ஆனால் தேர்தல் நடத்தும் அதிகாரி மதியம் 3 மணி வரை வராததால் வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் தங்கள் எதிர்ப்பை சங்க செயலாளரிடம் தெரிவித்து சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று மேற்படி கூட்டுறவு சங்கத்திற்கு 11 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டதாக நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்ததை கண்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து கூட்டுறவு சங்க செயலாளரிடம் கேட்டதற்கு அவர் தேர்தல் அதிகாரியிடம்தான் கேட்க வேண்டும் என கூறிவிட்டார். எனவே வேட்பு மனு தாக்கல் செய்த அனைத்து கட்சியினரும் வயலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சஙக தேர்தலை ரத்து செய்ய கோரி பெரம்பலூர் மாவட்ட வன்னியர் சங்க தலைவர் தருமராஜ் தலைமையில் பா ம க கபிலன், விசிக ஜெயா, திமுக பழமலை, அமமுக ரெங்கநாதன், மற்றும் ராமநாதன், அண்ணாதுரை, சுப்புராயன், சோழன், ஆறுமுகம் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். தகவல் அறிந்த வந்த குன்னம் போலிசார் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.