Demonstration of Jactto Geo in Namakkal denounces the transfer of teachers to Anganwadi centers

இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு இடமாற்றம் செய்வதைக் கண்டித்து நாமக்கல்லில் அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் பார்க் ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பூபதி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் பாலகிருஷ்ணன், ஜெகதீசன், ராஜேந்திர பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரவீந்திரன் வரவேற்றார். உயர்மட்டக்குழு உறுப்பினர் செல்வராஜ், ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள் அண்ணாதுரை, முருகசெல்வராஜ், லோகநாதன், குணசேகரன், தமிழ்மணி, முருகேசன், கலைச்செல்வன், மாதேஸ்வரன் ஆகியோர் பேசினர்.
பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அங்கன்வாடி மையங்களில் துவங்கப்படவுள்ள மழலையர் வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை விதிகளுக்குப் புறம்பாகப் பணிமாற்றம் செய்வதைக் கைவிட வேண்டும்.
3,500 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளோடு இணைக்கும் திட்டம் மற்றும் 3,500 சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் கைவிட வேண்டும் என்பவை உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர். ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் நன்றி கூறினார்