Demonstration of Tamil Nadu electricity workers at Perambalur to insist on demands.

பெரம்பலூர்: பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பினர் சிஐடியு பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள மேற்பார்வை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வட்ட தலைவர்கள் கே.கண்ணன், டி.எஸ்.சம்பத் ஆகியோர் தலைமை வகித்தனர். மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு எ.கணேசன், வட்ட செயலாளர் எஸ்.அகஸ்டின், பொருளாளர் வி.தமிழ்செல்வன், கோட்ட செயலாளாகள்; எம்.பன்னீர்செல்வம், ஆர்.இராஜகுமாரன் கோட்ட தலைவர் அரியலூர் ஆர்.கண்ணன், பெரம்பலூர் ஜி.அண்ணாதுரை, வட்ட துணைசெயலாளர் எம்.கருணாநிதி, வட்ட பொருளாளர் பி.முத்துசாமி ஆகியோர் ஆர்ப்பாட்ட உரையாற்றினர்.

மாவட்ட செயலலாளர் ஆர். அழகர்சாமி, அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் நிர்வாகிகள் ஆர்.முருகேசன், பி.கிருஷ்ணசாமி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 1.12.2015 முதல் மின்ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய ஊதிய உயர்வை வழங்க வேண்டும், களப்பிரிவு மற்றும் கணக்கீட்டுபிரிவு ஊழியர்களின், பதவி உயர்வு தேக்க நிலையை போக்க வேண்டும், விடுபட்ட பகுதிநேர பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்,

மத்திய அரசின் 7வது ஊதியக்குழு அமலாக்கத்தை விரைவில் செயல்படுத்தி 1.1.2016 முதல் நிலுவைத்தொகையினை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சிப்பி எஸ் திட்டத்திற்கு பிடித்தம் செய்த தொகையை எந்த நிபந்தனையும் இன்றி பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!