Demonstration of the JACTTO-GEO system to address demands
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில், கூட்டமைப்பின் சார்பில் போராட்டத்தில் கலந்து கொண்ட சங்க நிர்வாகிகள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டியும், 2016 ஜன.1 முதல் 21 மாத ஊதியக் குழு நிலுவையை வழங்க கோரியும், ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக படி, ஊதிய விகிதங்களை வழங்கவும்,
சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்களுகள், ஊர்ப்புற நூலகர்கள், கணினி ஆசிரியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம், ஆகியவற்றை கைவிட்டு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடத்தினர்.