Demonstration On behalf of Namakkal District Cooperative Societies
நாமக்கல் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் பார்க் ரோட்டில் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கவுரவ தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை சங்கத்தின் மாவட்ட நிர்வாகி மணிகண்டன் துவக்கிவைத்தார்.
இதில் பணி வரன்முறை, மருத்துவ இன்சூரன்ஸ், ஓய்வூதியம் வழங்க வேண்டும். உணவு பொருட்கள் பொது விநியோக திட்டத்தின் கீழ் தொடர்ந்து வழங்க வேண்டும். கைத்தறி கூட்டுறவு சங்க பணியாõளர்களின் ஊதிய உயர்வில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும். கூட்டுறவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 18 ஆயிரம் வழங்கவேண்டும்.
அனைத்து ஊழியர்களுக்கும் உயர்ந்தபட்ச போனஸ் வழங்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்த வட்டியில் கடன் வழங்கவேண்டும். நலிவடைந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு அரசு நிதி உதவி வழங்கவேண்டும். கூட்டுறவு அச்சகத்திற்கு 2 மற்றும் 4வது சனிக்கிழமை விடுமுறை வழங்கவேண்டும். கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் மாவட்ட செயலாளர் ரங்கசாமி, மாநில இணை செயலாளர் சண்முகம், சிஐடியு மாவட்ட செயலாளர் வேலுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். முடிவில் மாவட்ட பொருளாளர் சிவக்குமார் நன்றி கூறினார். இதில் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.