Demonstration on behalf of Perambalur DMK District Women’s and Women’s Volunteers condemning the increase in cylinder prices!

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை முன்பு, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் தலைமையில், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் புஷ்பவள்ளிஇராஜேந்திரன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 15 நாட்களில் கேஸ் சிலிண்டர் விலை ரூ.100 உயர்த்தி, குறிப்பாக இல்லத்தரசிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஏழை,எளிய நடுத்தரக் குடும்பங்கள் இதுவரை சந்தித்திராத வருமான இழப்பை கொரோனா காலத்தில் சந்தித்துள்ளனர். பெரும்பாலான குடும்பங்களில் யாராவது ஒருவர் வேலை வாய்ப்பை இழந்திருக்கிறார்கள்.

அத்தியாவசியப் பொருட்கள் உள்பட அனைத்து பொருட்கள் விலையும் மத்திய பா.ஜ. க. – அ.தி.மு.க. ஆட்சியில் ஏறிக் கொண்டிருக்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும், திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னதாக பெண்கள், சிலிண்டருக்கு மாலையிட்டும், பாடை கட்டியும் எரிய வைத்து, பழைய காலத்தில் இருந்த மண்பானை சமையலுக்கு மாறும் விதமாக பானைகளை கொண்டு சமையல் செய்தனர். மாவட்ட செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் கண்டன உரையாற்றினார். இதில் மகளிரணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகள், ஒன்றியச் செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.அண்ணாதுரை, தி.மதியழகன், எஸ்.நல்லதம்பி, ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் வீ.ஜெகதீசன், சோமு. மதியழகன், சி.ராஜேந்திரன், நகரச்செயலாளர் எம். பிரபாகரன் மற்றும் மகளிரணியினர், மகளிர் தொண்டரணியினர், உள்ளிட்ட தி.மு.க முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!