Demonstrationon demand for withdrawal of the Central Government’s new Motor Vehicle Act
மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை வாபஸ் பெறக்கோரி நாமக்கலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மோட்டார் வாகன தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில் பார்க் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தால் இந்தியாவில் டிரைவர்கள், வாகன உரிமையாளர்கள், டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர்கள் மற்றும் மோட்டார் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து உரிமையாளர்களும், மெக்கானிக் தொழிலாளர்களும் வேலை இழந்து பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் மட்டுமே இத்தொழிலை செய்யக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே மத்திய அரசு புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரியும், டோல்கேட் மற்றும் இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்கக் கோரியும், வாகனங்களுக்கு எப்சி, லைசென்ஸ் போன் சான்றிதழ்கள் வழங்கும் உரிமத்தை தனியாரிடம் வழங்குவதை தடை செய்யக்கோரியும் நடைபெற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்புக்குழு கன்வீனர் சிங்காரம் தலைமை வகித்தார்.
நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் வாங்கிலி. பொருளாளர் சீரங்கன், சிஐடியு மாவட்ட செயலாளர் வேலுசாமி, ட்ரெய்லர் பணிமனை உரிமையாளர் சங்க செயலாளர் பன்னிர்செல்வம். நாமக்கல் மாவட்ட மோட்டார் சைக்கிள் மெக்கானிக் அசோசியன் செயலாளர் ரவிக்குமார், நாமக்கல் ஆல்மெக்கானிக் ஒர்க்ஷாப் ஓனர் அசோசியன் தலைவர் ஸ்ரீதர், நாமக்கல் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சந்திரசேகரன்.பொருலாளர் ராமசாமி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.