Demonstration to demand Perambalur; Tamil Nadu Government Officers Union Conference Resolution!

பெரம்பலூரில் நடந்த தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் 4 வது மாவட்ட மாநாட்டில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 21ம்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் சீவகன் தலைமை வகித்தார். மத்திய செயற்குழு உறுப்பினர் இளையராஜா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்கள் மாநில தலைவர் அமிர்தகுமார், எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினர்.

பெரம்பலூர் நகராட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு நகராட்சிக்கான வீட்டு வாடகைப்படி வழங்கிட வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவில்களிலும் பணிபுரியும் அனைவருக்கும் வட்ட அளவிலான வீட்டு வாடகை படி வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைத்து அதற்க்கான ஊதியம் வழங்க வேண்டும்.

பணியாளர் குறைப்பு செய்வதை தவிர்த்து அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கி ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்க வேண்டும். அனைத்து துறைகளிலும் பணியாற்றும் தற்காலிக பணியாளர், தொகுப்பூதிய மதிப்பூதியம் பெறுபவர்கள் அனைவரையும் நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைப்பாடுகளை களைந்து அனைத்து நோய்களுக்கும் காப்பீடு வழங்க வேண்டும்.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீண்ட காலமாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஸ்டாப் நர்ஸ், கணக்கு உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் ஆகியோர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும்.

அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள கவுரவ விரிவுரையாளர்களின் அரசாணை 56 ஐ உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும். உதவிப்பேராசிரியர் பணியிடம் நிரப்பும்போது எழுத்து முறையை ரத்துசெய்து. பழைய தேர்வு முறையே நடைமுறைபடுத்த வேண்டும் போன்ற கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும்.

வரும் 21ம்தேதி பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயலாளர் பாஸ்கர் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!