Dengue prevention activities: District Collector examination in private educational institutions
பெரம்பலூர் மாவட்டத்தில் மழைக் காலங்களில் பரவும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, மழைக்காலங்களில் தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும், கொதிக்க வைத்த குடிநீரை பருக வேண்டும், வீட்டு உபயோகத்திற்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள தொட்டிகளை முறையாக சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட விழிப்புணா;வுகள் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு சுகாதார நடவடிக்கைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, தண்ணீர் பந்தலில் உள்ள ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செயின்ட் ஜோசப் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட தனியார் கல்வி நிறுவனங்களின் வளாகத்திலுள்ள வகுப்பறைகளுக்கு நேரடியாக மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா இன்று நேரில் பார்வையிட்டு டெங்கு கொசுப் புழுக்கள் உருவாக வாய்ப்புள்ள இடங்கள் உள்ளனவா, சுகாதாரமாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதர், நகராட்சி ஆணையர் முரளி, வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் மருத்துவர் அரவிந்த் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.