Denial of permission to fly VCk flag in public places of Vadakamadavi, Annamangalam village; Resolution condemning the Perambalur District government administration!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர்(மேற்கு) மாவட்ட நிர்வாக குழு கூட்டம் பெரம்பலூரில் மாவட்ட செயலாளர் இரத்தினவேல் தலைமையில் நடைபெற்றது..

மாவட்ட செய்தித் தொடர்பாளர் மு.உதயகுமார், ஒன்றிய செயலாளர்கள்: எம்.பி.மனோகரன் பெரம்பலூர் (மே) இரா. பிச்சைப்பிள்ளை பெரம்பலூர்(கி)
எ.வெற்றியழகன், வேப்பந்தட்டை (மே), மா.இடிமுழக்கம், வேப்பந்தட்டை ஒன்றியம்(கி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்..

மண்டல துணை செயலாளர் பெ.லெனின், மாநில செயலாளர் வீர.செங்கோலன், நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் சா.மன்னர் மன்னன்
மாநில துணை செயலாளர், வழக்கறிஞர் இரா.சீனிவாசராவ் போன்றோர் சிறப்பு அழைப்பார்களாக கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.
பெரம்பலூர் (கி) ஒன்றிய செயலாளர் சி.பாஸ்கர் நன்றி கூறினார்..

கூட்டத்தில், கடந்த 17.08 2023 தேதி அன்று விசிக தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சியின் கொடியை வடக்கு மாதவி, அன்னமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களில் கொடி ஏற்ற அனுமதி மறுத்த மாவட்ட அரசு நிர்வாகத்தை இந்த நிர்வாக குழு கண்டிக்கிறது என்றும், பெரம்பலூர் நகரில் சாதிகளின் பெயரில் நடத்தபடும் வர்த்தக நிறுவனங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும்,

வடக்கு மாதவி, அன்னமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் பொது இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை ஏற்ற அனுமதிக்க வேண்டும் என மாவட்ட அரசு நிர்வாகத்தை வலியுறுத்தி வருகிற 30/8/2023 அன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கண்டன தொடர் முழக்க போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், அரியலூரில் கலெக்டராக இருந்த ராகேஷ்குமார், அரசுக்கு சொந்தமான பொது இடத்தில் எந்த அரசியல் கட்சியின் கொடியும் இருக்க கூடாது, சொந்த இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என கொடிகம்பங்களை பிடிங்கி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!