Dental examination camp led by Councilor Durai Kamaraj in Perambalur Aranarai!
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 16 வது 17 வது வார்டு மக்கள் பயன்பெறும் வகையில் இன்று காலை கவுன்சிலர் துரை. காமராஜ் தலைமையிலும், ஏற்பாட்டிலும், அரணாரை கிராமத்தில், தனலட்சுமி சீனிவாசன் பல் மருத்துவமனையுடன் இணைந்து பல் மருத்துவ முகாம் நடந்தது. முகாமில், பற்கள் பரிசோதனை, பல் சுத்தம் செய்தல், உள்ளிட்டவை செய்யப்பட்டு, வருதை தந்த பொதுமக்களுக்கு இலவச ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பின்னர், உயர் சிகிச்சை மற்றும் மருந்துகள் பெற மருத்துவ கல்லூரி சார்பில் 30 சதவீதம் தள்ளுபடி அறிவிப்பு செய்யப்பட்டது. மேலும், முகாமில் 16 மற்றும் 17 வது வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள்ள திராளக கலந்து கொண்டனர். முகாம் தொடக்கத்தின் போது ஊர்த் தலைவர் மணி, கிராம முக்கியஸ்தர்கள் சிவப்பிரகாசம், சுப்பிரமணியன், சேகர், சுந்தரம், முத்துக்குமார், அருண் ஆகியோரும், தனலட்சுமி சீனிவாசன் பல் மருத்துவக் கல்லூரியை சேர்ந்த பல் மருத்துவ நிபுணர்கள் மேத்யூ, தர்சன்ராம், அகிலா மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் சசிகுமார், மனோஜ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.