Deputy Assistant Commissioner of Police Salute to the daughter who came to SP

ஹைதராபாத்தில் எஸ்பியாக வந்த தனது மகளுக்கு காவல்துறை துணை ஆணையர் உமாமகேஸ்வர சர்மா, சல்யூட் அடித்த உணர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஹைதராபாத்தில் ரச்சகொண்டா போலீஸ் ஆணையர் அலுவலகத்துக்கு உட்பட்ட மல்காஜ்கிரி பகுதி காவல் துறை துணை ஆணையராகப் பணியாற்றி வருபவர் ஏ.ஆர். உமாமகேஷ்வர சர்மா. இவர் கடந்த 1985-ம் ஆண்டு ஆந்திரா போலீஸ் தேர்வில் எஸ்.ஐ.யாக தேர்வானவர். அதன்பின் படிப்படியாக பதவி உயர்வு பெற்று தற்போது போலீஸ் துணை ஆணையராக இருக்கிறார். அடுத்த ஆண்டு ஓய்வு பெற உள்ளார்.

உமாமகேஸ்வரராவின் மகள் சிந்து சர்மா. இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்வு பெற்றார். சமீபத்தில் தெலங்கானாவில் உள்ள ஜக்தியால் மாவட்ட எஸ்.பி.யாக சிந்து சர்மா நியமிக்கப்பட்டார்.இந்நிலையில், கொங்கலா காலன் பகுதியில் நேற்று தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் சார்பில் பிரமாண்டமான மாநாடு நடந்தது. அந்த மாநாட்டின் பாதுகாப்புப் பணிக்காக, உமாமகேஸ்வர ராவும், அவரின் மகள் சிந்து சர்மாவும் ஒரே இடத்தில் பணியாற்றினார்கள்.

தந்தையும், மகளும் ஒரே இடத்தில் பணியாற்றியபோது இருவரும் சந்திக்க நேர்ந்தது. அப்போது, தன்னைக் காட்டிலும் உயர்ந்த பதவியில் இருக்கும் மகளைப் பார்த்து பெருமையுடன் உமாமகேஸ்வரராவ் சல்யூட் அடித்தது உணர்வு மிகு தருணமாக அமைந்தது. வழக்கமாகக் கடந்த 30 ஆண்டுகளாக உமாமகேஸ்வர ராவ் கடமை அடிப்படையில் உயர் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் சல்யூட் அடித்து வருகிறார்.

ஆனால், முதல்முறையாகத் தனது மகளை தன்னைக் காட்டிலும் உயர்ந்த பதவியில் வைத்துப் பார்த்ததையும், அவருக்கு சல்யூட் அடித்த அந்த நிமிடத்தைவிட ஒரு தந்தைக்கு பெருமைமிகு தருணம் எதுவாக இருந்துவிட முடியும்.இதுகுறித்து உமாமகேஸ்வரவார் கூறுகையில், ‘ முதல் முறையாக நானும், எனது மகளும் ஒரே இடத்தில் பணியாற்றினோம். எனக்கு மேலதிகாரியாக என் மகள் நியமிக்கப்பட்டார். நான் அவரைப் பார்த்தபோது, என் உயர் அதிகாரி என்பதால், அவருக்கு சல்யூட் அடித்தேன்.

அப்போது அவரும் மகள் என்ற முறையைக் காட்டிலும், ஒரு போலீஸ் எஸ்.பி. என்ற ரீதியில் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால், இது குறித்து ஒருவொருக்கொருவர் ஆலோசிக்கவில்லை. வீட்டுக்குச் சென்றால், தந்தை, மகளைப் போலத்தான் பழகுவோம். என் மகளுக்கு நான் சல்யூட் அடித்தது பெருமையாக இருந்தது” எனத் தெரிவித்தார். தனது தந்தையுடன் பணியாற்றியது குறித்து சிந்து சர்மா கூறுகையில், ‘என் தந்தையுடன் பணியாற்றியதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது. இருவரும் ஒன்றாகப் பணியாற்ற மிகச்சிறந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது” எனத் தெரிவித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!