DGP Silendra Babu donates to the family of a firefighter who died during a rescue operation near Perambalur
பெரம்பலூர் அருகே செல்லியம்பாளையம் கிராமத்தில் கடந்த 12-07-2020ஆம் தேதி கிணற்றில் தவறி விழுந்தவர்களை மீட்க சென்ற போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த தீயணைப்பு வீரர் ராஜ்குமாரின் குடும்பத்தாருக்கு, ஆறுதல் கூறிய அவர், தீயணைப்பு துறையினர் வழங்கிய 44 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குனர்(கூடுதல் பொறுப்பு) சைலேந்திரபாபு வழங்கினார். அப்போது மாவடட கலெக்டர் வே.சாந்தா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.