Dharna with wedding invitation at Puducherry female collector’s office demanding to keep her boyfriend married!

காதலனுடன் திருமணம் செய்து வைக்கக் கோரி புதுச்சேரியை சேர்ந்த இளம்பெண் பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட் மணிக்கூண்டு எதிரில் வாடை தெருவைச் சேர்ந்தவர் துரை மகள் சித்ரா (26) பிளஸ் டூ படித்துள்ளார். தாய் தந்தை இல்லாதநிலையில் பாட்டியுடன் வசித்து வரும் இவர், ஷாதி டாட் காம் என்ற தகவல் மையத்தில் வரன் வேண்டி பதிவு செய்தார். அப்போது, பெரம்பலுார் மாவட்டம், அடைக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் கமல் ( 27), என்பவர் சித்ராவின் மொபைல் போனுக்கு தொடர்புக் கொண்டு, இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறினார். தொடர்ந்து, இருவரும் கடந்த 6 மாதகாலமாக செல்போனில் அடிக்கடி பேசி வந்தனர். இதைத் தொடர்ந்து, கமல் தனது ஆதார் அட்டையை சித்ராவின் மொபைல் போனுக்கு அனுப்பி, புதுச்சேரியில் பதிவு திருமணம் ஏற்பாடு செய்யுமாறு தெரிவித்தார். ஸ்ரீமத் ஆழ்வார் சபையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வேணுகோபால் சுவாமி தேவஸ்தானத்தில் மார்ச் 21ம் தேதி திருமண செய்வதற்காக, திருமண பத்திரிக்கை உள்ளிட்ட திருமணத்திற்கான ஏற்பாடுகளை சித்ராவின் குடும்பத்தினர் செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 12ம் தேதி சித்ராவின் மொபைலுக்கு தொடர்பு கொண்ட கமல், வீட்டில் உள்ள அனைவரும் உன்னை பார்க்க விரும்புவதாகக் கூறி, தனது ஊருக்கு கிளம்பி வருமாறு சித்ராவிடம் தெரிவித்தார். இதை நம்பி கமல் வீட்டுக்கு சென்ற சித்ராவை அவர் பலமுறை உடலுறவு கொண்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, ஊருக்கு சென்ற சித்ரா மீண்டும் கமலை செல்போனில் தொடர்பு கொண்டபோது திருமணம் செய்துகொள்ள முடியாது என கமல் தெரிவித்தார்.

இதுகுறித்து, சித்ரா பெரம்பலுார் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து, சித்ரா நேற்று பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்திற்கு, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நிர்வாகிகளுடன், காதலனுடன் திருமணம் செய்து வைக்கக்கோரி மனு கொடுக்க வந்தார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், கலெக்டர் அலுவலக போர்டிகோ படியில் அமர்ந்து, இளம்பெண் சித்ரா மற்றும் புதுச்சேரி மற்றும் பெரம்பலூர் மாதர் சங்க நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலுார் எஸ்.ஐ., சித்ரா உறுதி அளித்ததையடுத்து, போராட்டத்தை கைவிட்டு, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு, கலைந்து சென்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!