Difficulty selling vegetables and fruits to farmers For information, contact the Perambalur District Administration

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கொரோனா வைரஸ் நோய் தடுப்பிற்காக, 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய காய்கறிகள் மற்றும் பழங்கள் போதுமான அளவு கிடைப்பதற்கு போர்க்கால அடிப்படையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பெரம்பலூரில் 700 ஹெக்டர் பரப்பில் பழங்களும், 9 ஆயிரத்து 200 ஹெக்டர் பரப்பளவில் காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகின்றன. தற்போது பெரும்பாலும்அறுவடைக்கு தயாராகி வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இச்சூழ்நிலையில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ அல்லது துணை இயக்குநர் அலுவலகத்தையோ அணுகலாம்.

இதுதொடர்பாக, விவசாயிகளுக்கு வேண்டிய வழிகாட்டுதலை வழங்குமாறு மேற்கண்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், காய்கறிகள் விற்பனையை எளிதாக்குவதற்கு, தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படும் நேரடி விற்பனை மையங்கள் மற்றும் கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் வாயிலாக நடமாடும் காய்கனி விற்பனை நிலையங்களை இயக்கவும், நுகர்வோருக்கு அவர்களுக்கு அருகிலேயே நேரடியாக நியாயமான விலையில் வழங்குவதற்கும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

விவசாயிகளுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை அணுகி வேண்டிய உதவிகளைப் பெறலாம். வட்டார வாரியான தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் மற்றும் தோட்டக்கலை அலுவலர்களின் தொலைபேசி எண்கள் கீழே தரப்பட்டுள்ளன.

ஆலத்தூர் 9486311707, 9715167612, பெரம்பலூர் 9786377886, 8056185081, வேப்பந்தட்டை 9585196906, 9787393879, வேப்பூர் 9486311707, 9150017347

தமிழ்நாடு அரசு மற்றும் தோட்டக்கலைத்துறை மேற்கொண்டுள்ள இத்தகைய வாய்ப்பினை அனைத்து காய்கறி மற்றும் பழங்கள் சாகுபடி செய்யும் வேளாண்பெருமக்கள் பயன்படுத்தி, பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் எவ்வித தடையுமின்றி கிடைத்திட உதவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!