Disabled persons can apply for three wheeler scooter: Namakkal Collector
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் 2018-19-ஆம் நிதியாண்டுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெற கல்வி பயில்பவர்கள், பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில் புரிபவர்கள் விண்ணப்பிக்கலாம். இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் உள்ளவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
தகுதியான மாற்றுத் திறனாளிகள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, கல்வி பயில்பவர்கள், பணிபுரிபவர்கள், சுயதொழில் புரிபவர்கள் சான்று மற்றும் மாற்றுத் திறனாளிக்கான தேசிய அடையாள அட்டையுடன் வரும் 31-ஆம் தேதிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.