Discussion began with the hoisting of a flag on the Solemnity of Christ the King. in Namakkal
நாமக்கல்லில் கிறிஸ்து அரசர் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
நாமக்கல் திருச்சி ரோட்டில் போலீஸ் நிலையம் அருகில் கிறிஸ்து அரசர் சர்ச் உள்ளது. இந்தக் சர்ச்சில் கிறிஸ்து அரசர் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவை முன்னிட்டு காலை 8.30 மணிக்கு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து 9.30 மணிக்கு திருச்சி செயின்ட்பால் கல்லூரி சேவியர் லாரன்ஸ் திருக்கொடியை ஏற்றி வைத்தார்.
விழாவை முன்னிட்டு நாளை 19ம் தேதி மாலை 6.,30 மணிக்கு நவநாள் திருப்பலி துவங்குகிறது.
வேலாயுதம்பாளையம் லாசர் சுந்தர்ராஜ், பரமத்தி பீட்ட ஜான்பால் ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர். நாளை 20ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெறும் நவநாள் திருப்பலி நிகழ்ச்சியில் ராசிபுரம் ஜெயசீலன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கின்றார்.
21ம் தேதி நடைபெறும் நவநாள் திருப்பலியில் கரூர் ராயப்பன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கின்றார். 22, 23, 24ம் தேதிகளில் நடைபெறும் நவநாள் திருப்பலி நிகழ்ச்சிகளில் கோவை ஜோசப் பிரகாசம் கலந்துகொள்கிறார்.
25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை புதுநன்மை வழங்கும் விழா மற்றும் கிறிஸ்து அரசர் விழா நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு நடைபெறும் திருவிழாத் திருப்பலி நிகழ்ச்சியில் வாழப்பாடி விமல்தாமஸ் கலந்துகொள்கிறார். மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் சேலம் ராஜமாணிக்கம், சாலமோகன்ராஜ் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
மாலை 6.30 மணிக்கு கிறிஸ்து அரசு தேர்பவனி நாமக்கல் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெறும். இரவு 9.30 மணிக்கு திவ்ய நற்கருணை ஆசீர் மற்றும் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை ஜான் அல்போன்ஸ், அருள்சுந்தர் மற்றும் பங்குமக்கள் செய்துள்ளனர்.