Discussion for the youth on behalf of the Hope Trust, the pro-judge participated!

2047 ல் யுவ சம்வத் இந்தியா, இளையோர்களுக்கான கலந்துரையாடல் கருத்தரங்கம், பெரம்பலூர் மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் ஹோப் தொண்டு நிறுவனம் இணைந்து, ஶ்ரீசாராதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்தியது.

இதில், சிறப்பு விருந்தினர்களாக பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான எஸ். சந்திரசேகர், சப்-கலெக்டர் நிறைமதி சந்திரமோகன், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஶ்ரீராமக்கிருஷ்ணா கல்வி குழும நிறுவனங்களின் நிறுவன தலைவர் எம். சிவசுப்பிரமணியன், செயலாளர் எஸ். விவேகானந்தன், பெரம்பலூர் மாவட்ட இளையோர் நல அலுவலர் கீர்த்தனா, மற்றும் ஹோப் ட்ரஸ்ட் நிறுவன இயக்குநர் தினேஷ் ஆகியோர் கலந்து கொணடு தலைமையுரை நிகழ்த்தினர்.

கருத்தரங்கில், வளர்ந்த இந்தியாவின் இலக்கு, அடிமைத்தனம் மற்றும் காலனித்துவ மனப்பான்மையில் இருந்து விடுபடுதல், நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தில் பெருமை கொள்ளுதல், ஒற்றுமையுணர்வு, குடிமக்களின் கடமைகள் உணர்தல் ஆகிய தலைப்புகளில் கலந்துரையாடல் நடந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவியர்கள், கல்லூரி முதல்வர் எம்.சுபலட்சுமி, உள்பட விரிவுரையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். சிறப்பாக கலந்துரையாடிய மாணவிகளுக்கு புத்தகங்கள் பரிசாக சிறப்பு வழங்கி கவுரவித்தனர். ஹோப் தொண்டு நிறுவன திட்ட இயக்குனர் திவ்யா நன்றி கூறினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!