Dispute over division of property; Father-in-law and doughter in law supporters clash! Police investigation!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கீழப்பெரம்பலூர் கிராமத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக டீக்கடை நடத்தி வருபவர் ராமலிங்கம் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் தனது பூர்வீக சொத்தை சரிபாதியாக பிரித்து தந்துள்ளார், இருப்பினும் இவருடைய சின்ன மருமகளான ராஜலட்சுமி என்பவர் தனது பங்குக்கான இடம் அளவு குறைவாக இருப்பதாக தொடர்ந்து தனது மாமனார் மீது அவ்வப்போது தகராறு செய்து வந்தாக கூறப்படுகிறது. இது தொடர்பாக குன்னம் காவல் நிலையத்தில், ஏற்கனவே இரண்டு மூன்று முறை புகார் மனு அளிக்கப்பட்டு சமாதானப் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு புகார் மனு மீது விசாரித்ததில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதே நிலை நீடித்தால் இரண்டுபேருக்கும் சொத்தை இல்லை என்றும் கூறி வந்த நிலையில் நேற்றிரவு சுமார் 8 மணி அளவில் ராமலிங்கத்தின் வீட்டிற்கு சென்ற ராஜலட்சுமி, அவரது அண்ணன் குமார், தாய் ராணி உள்ளிட்ட 7 ஆதரவாளர்கள் ராமலிங்கத்திடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. அவரை காப்பாற்ற முயனற் உறவினர்கள் மீதும் தாக்கப்பட்டனர். கிராம மக்கள் ஒன்று திரண்டதால் ராஜலட்சுமியின் ஆதராவாளர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கு உள்ளான ராமலிங்கம் உள்ளிட்டவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சொத்து தகராறில் மாமனார் , மருமகள் ஆதரவாளர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!