Perambalur District BJP plea to choose a new district administrators: For women greater opportunity to decide on a new leader

பெரம்பலூரில் நடந்த மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு தேர்தல் திருவிழா 2020 கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சாமி.இளங்கோவன் தலைமை வகித்தார்.


கோட்ட பொறுப்பாளர் சிவசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் சுப்ரமணியம், மாநில செயலாளர் ராமலிங்கம், திருச்சி கோட்ட இணை பொறுப்பாளர்
இல.கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் தடாபெரியசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பின்னர் நடந்த புதிய நிர்வாகிகள் தேர்தலில் முன்னாள் மாவட்ட தலைவரும், மாநில செயற்குழு உறுப்பினருமான ஆர்.சி.ஆர். சந்திரசேகரன் புதிய மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை பதவியில் அமர்த்தி மூத்ததலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில்,

இந்தியா முழுவதும் பெரிய எழுச்சி பாரதிய ஜனதா கட்சிக்கு வந்துக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நாம் தவிர்க்கமுடியாத சக்தியாக உருபெற்றிருக்கிறோம்.

நமக்குள் நட்புறவு மிகப்பெரிய அளவில் ஏற்படவேண்டும். அப்போது மாற்றங்களை கொண்டுவரமுடியும். தேசிய அளவில் உள்ள ஒரு நல்ல சூழ்நிலையை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

குடிமக்களின் தேசிய பதிவு, குடியுரிமை திருத்த சட்டம் போன்றவற்றை தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே வரும் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக அதனை ஊதி பெரிதாக்கி பிரச்சனை செய்து வருகின்றனர். நாம் கட்சியினர் மக்கள் மத்தியில் தேசிய குடியுரிமை சட்டத்தால் எந்த வகையிலும் பாதிப்பில்லாத, எந்த மக்களுக்கும், எந்த மதத்திற்கும் பாதிப்பில்லாத சட்டத்தை பூதகரமாக ஆக்கிவருகின்றனர் என பொதுமக்களிடம் எடுத்துரைக்கவேண்டும்.

பாரதிய ஜனதா கட்சியினருக்கு தன்னம்பிக்கை அதிமாக ஏற்படவேண்டும். திட்டமிட்டு சிந்தித்து செயல்படவேண்டும், அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். வரும் சட்டமன்றம், பார்லிமெண்ட் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியினர் தேர்தலில் நின்று வெற்றிப்பெறும் வகையில் பாரதிய ஜனதா கட்சி வளரவேண்டும். அதற்கான தேர்தல் பணியை இப்போதே துவக்கவேண்டும் என பேசினார். வெற்றி பெற்ற ஊராட்சித் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டது.

புதிதாக பதவி ஏற்றுக் கொண்ட மாவட்டத்தலைவர் ஆர்.சி.ஆர் என்கிற சந்திரசேகரன் தற்போது பெரம்பலூர் மாவட்டத் தலைவராக 3வது முறையாக பதவியேற்றுள்ளர். அப்போது அவர் பேசியதாவது: உள்ளாட்சியில் அதிகளவில் களம் கண்டு வெற்றி பெறவேண்டும், மேலும், பெண்களுக்கு அதிகளவு வாய்ப்பளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

மாவட்ட நிர்வாகிகள் சாமிநாதன், ராஜேந்திரன், குருராஜேஷ், ராமசாமி, மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!