District level consultation meetings on state education policy: Perambalur Collector information!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

மாநில கல்விக் கொள்கை சார்பான பல்வேறு காரணிகள் குறித்து கருத்துக்கேட்புக் கூட்டங்கள் மண்டல அளவில் நடத்த உத்தேசிக்கப் பட்டுள்ளது. மாநிலக் கல்விக் கொள்கை சார்பாக கருத்துகளை பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கல்லூரி முதல்வர்கள்/ தொழிநுட்பகல்லூரி முதல்வர்கள்/ பேராசிரியர்கள்/ தனியார் பள்ளிகளின் தாளாளர்கள்/ கல்வியாளர்கள்/ தன்னார்வலர்கள்/ தொண்டு நிறுவனங்கள் / ஆசிரியர்கள் / ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் / மாணவர்கள்/ பெற்றோர்கள் ஆகியோர் எழுத்துபூர்வமாக பெரம்பலூர் முதன்மை கல்வி அலுவலருக்கு 11.10.2022 அன்று அனுப்பி வைக்குமாறும், மேலும் பெரம்பலூர் மாவட்ட அளவில் 11.10.2022 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் மாநில கல்விக் கொள்கை சார்பான கருத்துக்கேட்பு கூட்டத்தில், தங்கள் கருத்தினை அறிக்கையாகவும், எழுத்து பூர்வமாகவும் நேரில் தெரிவிக்கலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!