District-level sports competition for state employees: feb16th in Perambalur going on.
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராமசுப்ரமணியராஜா விடுத்துள்ள தகவல் :
தடகளம் விளையாட்டில் 100மீ, 200மீ, 800மீ, 1500 மீ, ஆகிய ஓட்டப் போட்டிகளும், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 4ழூ100 மீ தொடர் ஓட்டம் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் ஆண்களுக்கும்,
பெண்களுக்கு 100மீ, 200மீ, 400மீ, 800 மீ, ஆகிய ஓட்டப் போட்டிகளும் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 4 X 100 மீ தொடர் ஓட்டம் ஆகிய விளையாட்டுப் போட்டிகளும்; இறகுப்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், கபடி, மேஜைப்பந்து, கையுந்துப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் இருபாலருக்கும், கால்பந்து விளையாட்டுப் போட்டி ஆண்களுக்கு மட்டும் நடைபெற உள்ளது, என தெரிவித்துள்ளார்.