District level sports competitions are started in Namakkal
நாமக்கல்லில் அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் துவங்கியது.
நாமக்கல் மாவட்ட அரசு அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் விளையாட்டு போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் பெரிய கருப்பன் துவக்கிவைத்தார். ஆண் மற்றும் பெண்களுக்கான தடகளம் விளையாட்டு போட்டியில் 100மீ, 200மீ, 800மீ, 1500மீ ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டெறிதல், 400 மீ தொடர் ஓட்டம் போட்டிகள் நடைபெற்றது. மேலும் கபாடி, வாலிபால் இருபாலருக்கும் நடத்தப்பட்டது. கால்பந்து போட்டி ஆண்களுக்கு மட்டும் நடத்தப்பட்டது.
நாளை (23ம் தேதி) கூடைப்பந்து போட்டிகள் இருபாலருக்கும் நாமக்கல் அரசு தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், டென்னிஸ், இறகு பந்து போட்டிகள் இருபாலருக்கும்- நாமக்கல் ஆபிசர்ஸ் கிளபிலும், டேபிள் டென்னிஸ் போட்டி இருபாலருக்கும் நாமக்கல் விக்டோரியா ஹாலிலும் நடைபெறுகிறது.
இதில் நாமக்கல் மாவட்டத்தில் பணி புரியும் அரசு ஊழியர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று மாலை நடைபெறும் விழாவில் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் பங்கேற்று பரிசுகள் வழங்குகிறார். போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் பெரிய கருப்பன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.