District level training course for Agricultural Workers Union in Perambalur

பெரம்பலூர். அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்புகள் துறைமங்கலத்திலுள்ள சங்க அலுவலகத்தில் நடை பெற்றது.

மாவட்டக்குழு உறுப்பினர் ராமு வரவேற்றார். நிர்வாகிகள் ஆர்.தேவகி, எஸ்.எம்.மதுரைவேணி, ஞானசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சங்க வளர்ச்சி குறித்தும் அமைப்பு ரீதியாக போராடி கோரிக்கைகளை வென்றெடுப்பது குறித்து மாநில செயலாளர் எம்.சின்னத்துரையும், 100நாள் வேலை திட்ட அமுலாக்கம் சட்டவிதிகள் மற்றும் அரசு உத்தரவுகள் குறித்து மாநில செயலாளர் கே.பக்கிரிசாமியும், அரசு நலத்திட்டங்கள் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு குறித்து மாநிலக்குழு வாசு ஆகியோர் பயிற்சி வகுப்பில் கருத்துரை ஆற்றினர்.

உழைப்பாளிகளின் உடல் நலன் காப்போம் குறித்து மக்களுக்கான மருத்துவர் கழக மாநில செயலாளர் டாக்டர் சி.கருணாகரனும், மற்றும் எதிர்காலகடமைகள் தலைப்பில் மாவட்ட செயலாளர் பி.ரமேசும் விளக்கவுரையாற்றினர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு சட்டத்தின் கீழ் 100 நாள் வேலை கேட்டும், வேலையில்லா காலநிவாரணம் கேட்டும், அரசு உத்தரவின்படி தேர்தல் நாள் அன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பு கேட்டும் ஜீன் மாதம் 4ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள யூனியன் அலுவலங்களில் மனு அளிக்கும் போரட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஜீலை மாதம் முதல் வாரத்தில் 50 ஆயிரம் பனைவிதை மற்றும் மரக்கன்றுகள் மாவட்டம் முழுவதும் நடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட துணைசெயலாளர் எஸ்.ஜெய்சங்கர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் வி.காமராஜ் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!