Diwali; License for temporary firecracker shop; Perambalur Collector V. Satha Information!

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க இந்திய வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் விதிகள் 2008-ன்படி (AE-5)-ன் கீழ் பட்டாசு உரிமம் கோரி மாவட்ட வருவாய் அலுவலருக்கு விண்ணப்பம் தாக்கல் செய்ய விரும்புகிறவர்கள் தங்களது விண்ணப்பங்களை உரிய ஆவணங்கள் மற்றும் இணைப்புகளுடன் அருகில் உள்ள பொதுசேவை மையம் மூலம் அக்.10 க்குள் விண்ணப்பிக்கலாம். பின்னர், பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

மேலும், படிவம் AE5-ல் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் வரைபடங்கள் 6 பிரதிகளுடன் உரிய கணக்கு தலைப்பில் தற்காலிக உரி கட்டணம் ரூ.500- செலுத்தப்பட்டமைக்கான ரசீது, பத்திரம் நகல், ஆதார் அட்டை நகல், சொத்து வரி ரசீது மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் அக். 10. க்குள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தாக்கல் செய்திட வேண்டும். காலதாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!