பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதியில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளராக கி.ராஜேந்திரன் போட்டியிடுகிறார்.
இன்று காலை செங்குணம் கிராமத்தில், கட்சிபிரதிநிதிகளுடன் துவங்கிய அவர் ஊழலற்ற ஆட்சி அமைக்கவும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அமைக்கவும், தேமுதிகவை ஆதரித்து அதிக அளவில் தன்னை வெற்றி பெற செய்ய வேண்டுமன வாக்காளர்களிடம் கோரினார்.
பின்னர், பாலம்பாடி, அருமடல், கவுள்பாளையம், நெடுவாசல், க.எறையூர், கல்பாடி, எறையசமுத்திரம், அயிலூர், அ.குடிக்காடு, எளம்பலூர், தண்ணீர்பந்தல், வடக்குமாதவி, சோமணடாபுதூர், எசனை, கீழக்கரை, பாப்பாங்கரை, ஆலம்பாடி, திருப்பெயர், மேலப்புலியூர் ஆகிய தீவிர பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேமுதிக பொருளாளார் சீனி. வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் வாசு.ரவி, பொதுக்குழு உறுப்பினர் ரவிக்குமார், விசிக வழக்கறிஞர் அணி வக்கீல் ரத்தினவேலு, மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.