பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பந்தட்டை ஒன்றிய தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வ.களத்தூரில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் துரை.சிவாஐயப்பன் தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை.காமராஜ் கலந்து கொண்டு, வருகின்ற சட்டமன்ற தேர்தல் குறித்தும், 2016 அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் முதல்வராவதற்கு பெரம்பலூர் சட்ட மன்றதின் சார்பாக சட்டமன்ற உறுப்பினரை தேர்தெடுத்து அனுப்புவது குறித்தும், கட்சி செயல்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் கணபதி, மாவட்ட பொருளாளர் சீனி.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் கங்காதரன், கண்ணுசாமி, சுடர்செல்வன், செயற்குழு உறுப்பினர் செல்லப்பிள்ளை,
பொதுகுழு உறுப்பினர் ரவிக்குமார்,மாவட்ட மகளிர் அணி செயலாளர் வைரமணி, சாந்தி , மாவட்ட இளைஞராணி செயலாளர்கள் இளையராஜா, மாவட்ட மாணவாரணி செயலாளர் முத்தமிழ்செல்வன், கோவிந்தராஜ் ,தொண்டரணி செயலாளர் புனிதராஜ், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் வாசுரவி,
குரும்பலூர் பேரூர் செயலாளர் ரமேஷ், கேப்டன் மன்ற செயலாளர் தவசிஅன்பழகன்,தொழிற்சங்க நிர்வாகிகள் ஜோதிலெட்சுமி, முன்னதாக அரும்பாவூர் பேரூர் கழக செயலாளராக தங்கராசு வரவேற்றார்.
ஒன்றிய நிர்வாகிகள் வெங்கட்ராஜ்,, பாலகிருஷ்ணன் ,செல்லமுத்து, ராஜேஷ் , பரமசிவம் பன்னீர்செல்வம் .ஷேக்முகமது ராஜேந்திரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் , கிளை கழக, மகளிரணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். வேப்பந்தட்டை ஒன்றிய பொருளாளர் கணேசன் நன்றி கூறினார்.