DMK And on behalf of allies struggle to strike tomorrow ! District Secretary Kunnam C. Rajendiran!

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை நடைபெறும் முழு கடையடைப்பு போராட்டம் குறித்து மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கை :

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டெர்ட்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களை அழைத்துப் பேசி பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வு காண முன் வரவில்லை.முன் கூட்டியே அறிவிக்கப்பட்டு நடைபெற்ற பேரணியில் சட்டம்-ஒழுங்கிற்கு பாதிப்பு வராமல் இருக்க அதற்கு தேவையான எண்ணிக்கையில் காவல்துறையினரை அங்கு நிறுத்தி முன்னெச்சரிக்கையாக எவ்விதமான தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

அங்குள்ள காவல் துறை அதிகாரிகளோ, மாவட்ட அதிகாரிகளோ போராட்டக்காரர்களை அழைத்துப் பேசி அமைதியான சூழலை உருவாக்கி ஒரு தீர்வு காணவும் எவ்விதத்திலும் முயற்சிக்கவில்லை.

தொடர்ந்து போராடி வரும் மக்கள் மீது ஆணவத்தோடு பழி வாங்கும் எண்ணத்தில் மனிதாபிமானமற்ற தாக்குதல் நடத்தவே அ.தி.மு.க. அரசும் மாவட்ட அதிகாரிகளும், உயரதிகாரிகளும் காத்திருந்து, அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இப்படியொரு கொடூரமான துப்பாக்கிச் சூட்டை திட்டமிட்டு நடத்தியிருக்கிறார்கள்.

எனவே அ.தி.மு.க.அரசின் அலட்சியத்தாலும், அரவணைப்பற்ற அராஜக அனுகு முறையினாலும் நிகழ்ந்துள்ள இந்த விபரீதமான பயங்கரவாத துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், ஸ்டெர்ட்லைட் ஆலையை நிரந்தரமாக உடனே மூடக்கோரியும் மாவட்ட கழக செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் தலைமையில், தி.மு.க. காங்கிரஸ், திராவிடர் கழகம், ம.தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி,விடுதலைச்சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் கலந்து கொள்ளும் ஜனநாயக ரீதியாக அறவழியில் ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் 25-05-2018 வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள், தொழிலாளர்கள், மாணவர்கள்,வணிகர்கள் உள்ளிட்ட அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!