DMK campaigning near Namakkal

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் திமுக சார்பில் ஒன்றியம் வாரியாக திண்ணைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் அனைத்து ஒன்றிய, நகர, பேரூராட்சிகளில், நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் ஒன்றிய, பேரூராட்சி பகுதிகளில் பார்லி தெகுதி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் 3வது கட்டமாக 3வது கட்டமாக புதுசத்திரம் வடக்கு மற்றும் தெற்கு ஓன்றியத்தில் கிராமம் கிராமாக வார்டுதோறும் சென்று 60 க்கும் மேற்பட்ட இடங்களில் திண்ணைப் பிரச்சாரம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
புதுச்சத்திரம் வடக்கு ஒன்றியத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன் தலைமை வகித்தார். ஒன்றிய பொறுப்பாளர் கவுதம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பார்லி தொகுதி பொறுப்பாளர் முன்னாள் எம்எல்ஏ பார்த்திபன் கலந்துகொண்டு வரும் பார்லி. தேர்தலில் எப்படி பணியாற்ற வேண்டும் என்று பேசினார். அவர் ஊராட்சி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களிடம் கள ஆய்வு செய்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை எப்படி சந்திப்பது,பூத் கமிட்டி உறுப்பினர்களின் பணி என்ன என்பது குறித்து பேசினார். இக்கூட்டங்கள் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் வார்டு வார்டாக சென்று அங்கு மரத்தடியிலும், திண்ணைகளிலும் அமர்ந்து பிரச்சாரம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ராசிபுரம் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், ஊராட்சி செயலாளர்கள் வரதராஜ், சுகுமார், செங்கோட்டையன், பெரியசாமி, நட்ராஜ், லிங்கப்பன், வீரப்பன், செங்கோட்டுவேலு, செந்தில்குமார், நல்லதம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து புதுச்சத்திரம் தெற்கு ஒன்றியத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் இராமலிங்கம்,ஒன்றிய பொறுப்பாளர் துரை ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன், தேர்தல் பொறுப்பாளர் பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். பொதுக்குழு உறுப்பினர் சுப்ரமணி,ஊராட்சி செயலாளர்கள் நேசராஜ், ரத்தினம், தமிழ்செல்வன், முத்துசாமி, விக்னேஷ்வரன், சுப்ரமணி, ராஜேந்திரன், ராஜ்மோகன், அண்ணாதுரை, செந்தில்குமார், மாரிமுத்து உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.