பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்ட மன்ற தொகுதி திமுக வேட்பாளராக நல்லறிக்கை கிராமத்தை சேர்ந்த தங்க.துரைராஜ் வரும் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்.
கடந்த சுமார் 15 நாட்களாக குன்னம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட செந்துறை, வேப்பூர், ஆலத்தூர் பகுதிகளில் தனது கட்சியினலுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று திமுக வேட்பாளர் தங்க.துரைராஜுக்கு சொந்த ஊரில் தனக்கு ஆதரவளித்து வாக்கு அளிக்க கோரி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது , அவருக்கும், அவரது உடன் சென்றிருந்த அவரது குடும்பத்தினர் மற்றும் திமுக , கூட்டணி கட்சியினருக்கு அவ்வூர் கிராம மக்கள் வீதிகள் தோறும், பூரண கும்ப மரியாதையும். வீதிகள் தோறும் பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு வாழ்த்தி அனுப்பினர்.
ஆங்காங்கே அதிர் வேட்டுகள் வெடித்தும், வாசல்கள் தோறும் வண்ண கோலமிட்டும், வாழை மரம் கட்டி அலங்கார வரவேற்பும் செய்திருந்தனர்.
இதனால் நல்லறிக்கை கிராமம் திருவிழா கோலம் பூண்டு இருந்தது. வேட்பாளர் துரைராஜ் வெற்றி பெற அவ்வூர் பெரியோர்கள், பொது மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.