பெரம்பலூர்: குன்னம் தொகுதி திமுக வேட்பாளர் கொளுத்தும் வெயிலிலும், வேப்பூர் ஒன்றியத்தில் மக்கள் கூடிய உள்ள பகுதிகளிலும், கிராமங்கள் தோறும் வீதிவீதியாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
இன்று காலை 7 மணி குன்னம் கிராமத்தில் வாக்கு சேகரிப்பை கட்சியினருடன் துவங்கிய வேட்பாளர் துரைராஜ், பெரியம்மாபாளையம், கரம்பியம், மூங்கில்பாடி, ஒதியம், லட்சுமிபுரம், அசூர், அந்தூர், கிளியூர், வரகூர், பரவாய், கல்லம்புதூர், சின்னபரவாய், ஆண்டிக்குரும்பலூர், ஓலைப்பாடி, வேப்பூர், கல்லை, காரைப்பாடி ஆகிய ஊர்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
பிரச்சாரத்தின் போது மாவட்ட செயலாளர் குன்னம்.சி.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடாசலம், முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைசாமி, வேப்பூர் ஒன்றிய செயலாளர் மதியழகன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.