DMK candidate Prabhakaran campaigns in Veppandattai Union
பெரம்பலூர் (தனி) சட்ட மன்றத் தொகுதிக்கு வேட்பாளராக திமுக சார்பில் போட்யிடும், எம்.பிரபாகரன் நேற்று காலை தனது கட்சி மற்றும் கூட்டணி கட்சியினருடன்,
வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம், ஈச்சங்காடு, அரசலூர், அன்னமங்கலம், விசுவக்குடி, முகமதுபட்டினம், பிள்ளையார்பாளையம், தொண்டமாந்துறை, விஜயபுரம், அய்யர்பாளையம், கோரையாறு, மலையாளப்பட்டி, சாஸ்திரிபுரம், பனம்பட்டி, சின்னமுட்லு, கொட்டாரகுன்று, அ.மேட்டூர், தழுதாழை, அரும்பாவூர், பெரியம்மபாளையம், பூலாம்பாடி பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்குகள் சேகரித்தார். மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், ஒன்றிய செயலாளர் எஸ். நல்லதம்பி, ஒன்றிய பெருந்தலைவர் க. ராமலிங்கம், துணை பெருந்தலைவர் எம்.ரெங்கராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பெ.அன்பழகன், ஊராட்சித் தலைவர் மருதாம்பாள் செல்வக்குமார், பசும்பலூர் ஜெயபால், மணிவண்ணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆர்.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆங்காங்கே வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தும், வெற்றி திலமிட்டும், மலர்மாலை அணிவித்தும் சிறப்பு வரவேற்பு கொடுத்தனர்.