DMK Councilor Collector’s Petition to remove water encroachment near Perambalur!
பெரம்பலூர் மாவட்டம், தொண்டைமாந்துறையை சேர்ந்தவர் முருகேசன், இவர், நீலகிரி மாவட்டம், நடுவட்டத்தில் வசித்து இவர் பேரூராட்சியில் கவுன்சிலராக உள்ளார். இவருக்கு பூர்வீகமான தொண்டைமாந்துறை கிராமத்தில் நிலம் உள்ளது. அதனருனே மலைப்பகுதியில் இருந்து மழை நீர் வடிந்து செல்லும் நீர்வரத்து வாய்க்கலை அதே பகுதியில் விவசாயம் நிலம் வைத்து இருக்கும் காட்டுராஜா மனைவி கவுசல்யா, ராமையா மகன் கலியமூர்த்தி இருவரும் வண்டிப்பாதையுடன் ஆக்கிரமித்து மாட்டுக் கொட்டகை அமைத்துள்ளதாகவும், மழைக்காலங்களில் தண்ணீர் வழிந்து சின்னாங்குளத்திற்கு செல்லாமல், வீணாக வேறு பகுதியில் செல்வதால், அருகில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், அதனால், நீர்வாய்க்காலையும், வண்டி தடத்தையும் மீட்க ஆக்கிரமிப்பை அகற்றி தருமாறு பெரம்பலூர் கலெக்டர் கற்பகத்திடம் மனு ஒன்றை கொடுத்துள்ளார். மனுவை பெற்றுக் கொண்ட கற்பகம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.